நாம் தமிழர் கட்சிக்கு தமிழர் விடியல் கட்சி எச்சரிக்கை!

ஈழ இனப்படுகொலைக்கு எதிராக களம் கண்டதாக சொல்லிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சி இன்று தடம் புரண்டு ஈழ இனப்படுகொலையின் பங்காளிகளான இந்திய-பார்ப்பனியத்தை பாதுக்காக்கும் வேலையை செய்து வருகிறது.

சிங்கள அரசின் மந்திரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே “இந்தியாவின் போரைத்தான் நாங்கள நடத்தினோம்” என்று கூறியுள்ளான். சிங்கள மக்களும் ஆரிய இனம் தான் என்று பாஜக-வின் அன்றைய தலைவர் அத்வானி கூறியதை தமிழர்கள் யாரும் மறந்துவிடவில்லை. ராஜீவ் காந்தி காலத்தில் இருந்து இந்திய அரசு ஈழ தமிழர்களை அழிக்கும் வேலையை நேரடியாக செய்து வருகிறது.
naam tamilar
தொடக்கத்தில் கூட்டுத் தலைமையாக இயங்கிய நாம் தமிழர் கட்சி, தனி மனித கட்டுப்பாட்டிற்குள் சென்ற பிறகு இந்திய-பார்ப்பனிய கட்டமைப்பை எதிர்த்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. போராடும் சக்திகளிடையே குழப்பத்தையும், பிரிவையும் ஏற்படுத்தம் வேலையையே செய்து வருகிறது. போராட்ட உணர்வுடன் கூடிய இளைஞர்களை மட்டுப்படுத்தியது.

மாறாக, இந்திய-பார்ப்பனிய கட்டமைப்பிலிருந்து தமிழர்களை மீட்க, தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தமிழர் எழுச்சியை நிகழ்த்திக்காட்டிய தந்தை பெரியாரையும், பெரியாரிய இயக்கங்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் அயோக்கியத்தனமான அரசியலை செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி.
80-களின் தொடக்கத்தில் புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம் வலுப்பெற்ற காலத்திலிருந்து தமிழகத்தில் புலிகளின் அரசியலுக்கு அரணாகவும் இந்திய-சிங்கள கூட்டு இனப்படுகொலையை எதிர்த்து களம் கண்டதும் பெரியாரிய இயக்கங்களை சார்ந்த தோழர்கள்தான். அன்றிலிருந்து இன்று வரை உண்மையான பெரியார் தொண்டர்க்ள் ஈழ விடுதலைக்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து தமிழர்களை ஆட்டு மந்தை கூட்டமாக நினைத்து தொடர்ச்சியாக பெரியார் மீது அவதூறு பரப்பும் வேலையை நாம் தமிழர் கட்சி செய்துவருகிறது. 2009 இறுதிக்கட்ட போரின்போது, சிங்களவனுக்கு உதவியாக இந்திய அரசு ஆயுதங்கள் அனுப்பிய போது, அந்த ஆயுதங்கள் தாங்கிய இந்திய இராணுவ வண்டிகளை கோவையில் மறித்து அடித்து நொறுக்கினர் பெரியாரிய இயக்கத்தினர். இது தமிழக வரலாற்றில் முதல் இந்திய ராணுவ தாக்குதல் போராட்டமாகும். இது போன்ற எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்க அஞ்சுகிற நாம் தமிழர் கட்சி தான் பெரியாரையும், பெரியாரிய இயக்கங்களையும் தமிழர்களுக்கு எதிரியாக சித்தரிக்க முயல்கிறது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது “கண்டி நாயக்கர்” என்ற வரலாற்று திரிவு ஆவணப்படத்தை வெளியிட முற்படுகிறது. முதலில் சிங்களவனை தெலுங்கர் வழி வந்த இனம் என்று ஒரு வரலாற்று திரிவை ஏற்படுத்தி, பின்பு தமிழர்களின் எழுச்சிக்காக, ஈழ விடுதலைக்காக போராடிய, போராடும் ஒரு பகுதியினரை தெலுங்கர் என்ற முத்திரை குத்த முற்படுகிறது. இதன் மூலம் சிங்கள பேரினவாதம் மீதும், பார்பனியத்தின் மீதும் இருக்கும் தமிழர்களின் நியாயமான போராட்ட உணர்வை தவறாக திசைதிருப்புகிறார்கள். சாதிய அடையாளங்களை கடந்து தமிழர்களாக போராடும் மக்களை, ஒரு போலி எதிரியாக கட்டமைத்து, அவர்கள் மீது பாசிச குணம் கொண்ட வெறி உணர்வை பரப்பும் கேவலமான சூழ்ச்சியை முன்னெடுக்கிறார்கள்.
பெரியாரையும் ராஜபக்சேவையும் ஒரே இனம் என பேசும் இழிச் செயலை நாம் தமிழர் கட்சி செய்துள்ளது. சிங்கள-பௌத்த பேரினவாதத்தையோ அதன் பங்காளியான இந்திய-பார்ப்பனியத்தையோ எதிர்க்க துணிவற்று போலியான ஒரு எதிரியை உருவாக்கும் சிவசேனா-ஆர்.எச்.எச் பானி அரசியலை நம்மால் இன்று தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது. உண்மையான எதிரியை பாதுகாத்து தமிழீழ விடுதலை போராட்டத்தை சிதைக்கும் இந்த சூழ்ச்சியை தமிழர்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது ஈழ விடுதலை போராட்டத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்!
“கண்டி நாயக்கர்” என்ற வரலாற்று திரிவு இனவெறி ஆவணப்படத்தை நாம் தமிழர் கட்சி வெளியிட முற்படும் பட்சத்தில், அவ்வரங்கத்தை தமிழர் விடியல் கட்சி முற்றுகையிடும் என்று அறிவித்துக்கொள்கிறோம்!!

இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு உண்மை தமிழ் தேசிய அமைப்புகளுக்கும், பெரியாரிய இயக்கங்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்!!

– தமிழர் விடியல் கட்சி.

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
naam-tamilar

(21)

Comments

comments

Category:

All Videos, News, NTK, Politics

Leave a Reply