நடிகர் சங்கம் உடைகிறது: புதிய சங்கம் துவங்குகிறது

தென்னிந்திய நடிகர் சங்கம் உடைகிறது எனவும், ” தமிழ் நடிகர் சங்கம் ” என உதயமாகிறது எனவும் தகவல் பரவுகிறது. சரத்குமார், அஜித், சிம்பு, ஆதரவாளர்கள் பிரிந்து வந்து தமிழ் நடிகர் சங்கம் என புதிதாக ஆரம்பிக்க இருப்பதாக பரபரப்பு தகவல் பரவிக்கொண்டிடுக்கிறது.நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல்:திரை உலகில் பரபரப்பு

நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் நடிகர்களை ஜோக்கர்கள் ஆக்கியதுதான் மிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவது குறித்து நடிகர் சிம்பு கூறியதாவது:

பல்வேறு காரணங்களுக்காக நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவத்தான் நடிகர் சங்கம் உள்ளது. ஆனால், எனக்கே ஒரு பிரச்சினை வந்தபோது நடிகர் சங்கம் ஒரு உதவியையும் செய்யவில்லை.

சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி என்னை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது. அந்த போட்டியின் மூலம், பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாக்கப்பட்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் பதவிக்கான விலகல் கடிதத்தை 22-ம் தேதி அளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் இந்த முடிவு, திரைஉலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்ட்டியில் அஜீத் பாடலுக்கு விஷால் தடை விதித்தாரா? – 19 April 2016

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்குப் பின் நடைபெற்ற பார்ட்டியில், அஜீத் பாடலை போடக்கூடாது என விஷால் தடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் கோலிவுட் நடிகர்கள் ஒன்றிணைந்து சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை நடத்தினர். நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடைபெற்ற இந்தப் போட்டியில் விஜய், அஜீத், சிம்பு போன்ற நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
(30)

Comments

comments

Category:

All Videos, Cinema, News

Leave a Reply