தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள் திசையன்விளை பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு – 24 April 2016

திசையன்விளை,

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள் என திசையன்விளையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

பொதுக்கூட்டம்

திசையன்விளையில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேருஜி கலையரங்கில் நடந்தது. ராதாபுரம் தொகுதி தலைவர் ஜெரால்டு வீரசந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்திரை வேல் வரவேற்றார். ராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லொபினை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அவர் பேசியதாவது:-

மற்ற கட்சிகளுக்கு இது தேர்தல். எங்களுக்கு இது மாறுதல். ஜனநாயகம், பணநாயகத்துக்கான போர். தமிழனின் தன்மானத்திற்கும், அவன் படும் அவமானத்திற்கும் இடையே ஆன போர். தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். தொடர்ந்து இவர்களின் படகுகள், வலைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. கல்பாக்கம், கூடங்குளம் அணுஉலைகளை அண்டை மாநிலமான கேரளாவிற்கு வந்தது. அதை அங்கு எதிர்த்ததால் இங்கே வந்தது. அணுஉலை மின்சாரம் தேவை என்கிறார்கள். பல ஆண்டு போராட்டம் இன்னும் முற்றுப்பெற வில்லை. இதற்கு இங்கே அனுமதி கொடுத்தது தி.மு.க.- அ.தி.மு.க. தான். ஆன்-லைன் வர்த்தகத்தால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழன் மட்டுமே ஆள வேண்டும்

ஆடு, மாடு, வேட்டி-சேலை, மிக்சி, கிரைண்டர் தருவது நல்ல அரசியல் அல்ல. இதுநாட்டை வளர வைக்காது. உற்பத்தியில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடிப்படை கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம். மருத்துவம், குடிநீர் இலவசம், தங்கு தடையில்லாமல் 25 பைசாவில் ஒரு யூனிட் மின்சாரம். வந்தால் செய்வேன் என்று கூறும் கட்சிகள் முன்பு வந்த போது ஏன் செய்யவில்லை? காமராஜர் மக்களை படிக்க வைத்தார். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் மக்களை மொத்தமாக குடிக்க வைக்கின்றனர். 8 கோடி தமிழர்கள் உள்ள இந்த நாட்டில், இந்த நாட்டை ஆள தமிழன் ஒருவரும் இல்லை. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் தமிழன் மட்டுமே ஆள வேண்டும். எனவே இந்த தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லொபினுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், மாநில பேச்சாளர் கரும்புலி கண்ணன், பசும்பொன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் இந்திரா, ராதாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அகிலன், வள்ளியூர் ஒன்றிய செயலாளர் பொன்னுதுரை, மேற்கு ஒன்றிய தலைவர் ஞானசிகாமணி, மாவட்ட துணை செயலாளர் சித்திரை லிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல் களக்காடு தேரடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் கார் வண்ணனை ஆதரித்து சீமான் பேசினார்.


If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
201604240226539129_Livelihood-of-fishermen--Become-lost-Thisayanvilai---Seeman_SECVPF

(9)

Comments

comments

Leave a Reply