காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது: சீமான் – 20 April 2016

வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும், திமுக தொண்டர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை அழுக்கு மூட்டை என்றும், அதனை தூக்கி சுமக்க முடியாது என்றும் கூறிய திமுக தலைவர் கருணாநிதி, தற்போது அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.

காங்கிரசை கருணாநிதி ஏற்றுக்கொண்டாலும், தன்மான உணர்வுள்ள அக்கட்சித் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என சீமான் குறிப்பிட்டார்.கண்டி நாயக்கர் – மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு ஆவணப்படம்

Kandi Nayakar Documentary Movie – 19 April 2016
If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
seeman_13

(32)

Comments

comments

Leave a Reply