நாம் தமிழர் கட்சி உள்பட இரு வேட்பாளர்கள் மனு தாக்கல் – 23 April 2016

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், மேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளின் தேர்தல் அலுவலகங்கள் தயார்படுத்தப்பட்டிருந்தன. காலை 11 மணிக்கு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் வேட்பாளர் வரவில்லை. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வெள்ளிக்கிழமை நடந்ததால், வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

இதனால் தொகுதி தேர்தல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தேர்தல் அலுவலர்களும், போலீஸார் மட்டுமே இருந்தனர்.

உசிலம்பட்டி பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட அக் கட்சியின் வேட்பாளர் ஜி.ஐந்துகோவிலான், தொகுதியின் தேர்தல் அலுவலரான உசிலம்பட்டி கோட்டாட்சியர் எம்.பாலசுப்பிரமணியனிடம் மனு தாக்கல் செய்தார். இதேபோல, மேலூர் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வி.மனோகரன் (56) என்பவர் தொகுதியின் தேர்தல் அலுவலர் எம்.முருகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்தார்.

1972 முதல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவில் இருந்த இவர் கட்சியில் தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதால் சுயேச்சையாக போட்டியிடுவதாக தெரிவித்தார்.

இன்று மனுதாக்கல் இல்லை: வேட்புமனு தாக்கல் சனிக்கிழமையும் (ஏப்.23) நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாதத்தின் 4-ஆவது சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதால், இன்று வேட்புமனு தாக்கல் இல்லையென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
(10)

Comments

comments

Category:

All Videos, News, NTK, Politics

Leave a Reply