தேர்தல் விதிமீறல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு

தேர்தல் விதிகளை மீறி பிளக்ஸ் போர்டு வைத்திருந்ததாக பாபநாசம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பாபநாசம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஹூமாயுன்கபீர் போட்டியிடுகிறார். இதற்காக அவர் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள அவர் பங்குதாரராக உள்ள கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்தி சின்னத்தில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வலியுறுத்தி பிளக்ஸ் போர்டு வைத்திருந்தார். இந்நிலையில் கும்பகோணம் தொகுதி தேர்தலின் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் மற்றும் தனி வட்டாட்சியர் என். ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் சென்றபோது தேர்தல் விதிகளுக்கு மாறாக பிளக்ஸ் போர்டு வைத்திருந்தது குறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் 2பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி,: தூத்துக்குடியில் வாக்காளர்களை பணம் வாங்க தூண்டியதாக நாம்தமிழர் கட்சியினர் இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி சாமுவேல்புரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கலையரசன், தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி பிச்சை ஆகியோர் பேசினர். அவர்கள் பேசும்போது ஒட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், அவர்களிடம் பணம் வாங்குவது தவறில்லை என்ற ரீதியில் பேசியுள்ளனர். இது குறித்து பறக்கும் படை வீடியோகிராபர் விஜயகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் இருவர் மீதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குபதிவு செய்துள்ளனர்If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
(9)

Comments

comments

Category:

All Videos, News, NTK, Politics

Leave a Reply