வெள்ளத்திற்கான முன்னெச்சரிக்கைகளை சரியாக செய்திருப்பாரா தெரியாது

ஆனால் வெள்ளத்தில் மக்கள் சிக்கித்தவிக்கும்போது பொதுமக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இருந்திருக்கமாட்டார் என்று தெரியும்
———-
ஈழப் படுகொலையை தடுத்து நிறுத்தியிருப்பாரா தெரியாது

ஆனால் புலிகளுக்கு தமிழக மக்கள் செய்யமுடிந்த உதவிகளைத் தடுத்து போராட்டங்களை மழுங்கடித்து ஈழம் பற்றிய செய்திகள் தமிழகத்தில் பரவாமல் மூடிமறைத்து 3மணிநேரம் உண்ணாவிரத நாடகமாடி ஏமாற்றியிருக்க மாட்டார் என்று தெரியும்
————–
முல்லைப்பெரியாறு அணை உரிமையை காப்பாற்றியிருப்பாரா தெரியாது

ஆனால் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவுக்குள் நுழைந்த ஒரு லட்சம் தமிழர்களை தடுத்துநிறுத்த எந்த முயற்சியும் செய்திருக்கமாட்டார் என்று தெரியும்.
—————
ஆந்திரா சுட்டுக்கொன்ற 20 தமிழர்கள் குடும்பத்திற்கு நீதி வாங்கித் தந்திருப்பாரா தெரியாது

ஆனால் சென்னைக்கு படகில் கூட்டமாக வந்து தமிழக மீனவர்களைத் தாக்கி குடிசைகளைக் கொளுத்திய தெலுங்கு மீனவர்களை சும்மா விட்டிருக்கமாட்டார். சென்னையில் கட்டடம் இடிந்து இறந்த ஆந்திரத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளிவிட்டிருக்கமாட்டார் என்று தெரியும்.
—————
கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்குக் கொடுத்தபோது தடுத்திருப்பாரா தெரியாது

ஆனால் கச்சத்தீவு நிரப்பும் போராட்டத்திற்கு சென்ற 10,000 மீனவர்களை மறித்து போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியிருக்கமாட்டார் என்று தெரியும்.
—————-
காவிரி நீரை கொண்டுவந்திருப்பாரா தெரியாது.

ஆனால் நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகாவுக்குத் தரக்கூடாது என்று பெரிய அளவில் நடந்த போராட்டத்தை ஏற்று மின்சாரத்தையாவது தடுத்திருப்பார்.
—————–
கன்னடர் தமிழர் மீது நடத்திய காவிரி கலவரத்தை தடுத்திருப்பாரா தெரியாது.

ஆனால் வீரப்பனாரைக் கொல்வதில் கன்னட அரசை விட வெறிபிடித்து அலைந்து அவரைக் கொன்றிருக்கமாட்டார். இது எனக்கு உறுதியாகத் தெரியும்.
————-
ஊழல் செய்வாரா தெரியாது.

ஆனால் 2ஜி போன்ற ஊழல் செய்து உலகையே திரும்பிபார்க்க வைத்திருக்கமாட்டார் என்று தெரியும்.
—————
ஈழத்திற்கு படை அனுப்பி தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்தியை தடுத்து நிறுத்தியிருப்பாரா தெரியாது.

ஆனால் அவரைக் கொலை வழக்கில் அப்பாவிகளை சிக்கவைத்து தூக்குவரை செல்ல விட்டிருக்கமாட்டார் என்று தெரியும்.
—————–
ஆக திராவிட அரசாங்கங்கள் தங்களால் முடிந்ததைக்கூட செய்யாமல் இருப்பது மட்டுமின்றி மக்கள் தானாக செய்வதையும் அடக்கிஒடுக்குகிறார்கள். சீமான் தன்னால் முடிந்ததைச் செய்வாரா தெரியாது. ஆனால் தானாக நடப்பதை தடுக்கமாட்டார் என்று தெரியும்.

“நான் தமிழன், நாம் தமிழர்”

‪#‎சீமான்‬
‪#‎இரட்டை_மெழுகுவர்த்தி‬
‪#‎நாம்_தமிழர்‬நாம் தமிழர் கட்சி காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Katchi Videos Total Collections / Video Database

காணொளி தொகுப்பு ஆண்டு வாரியாக |

Video Collection Year Wise

இணைப்பு | Link
Total Collection | மொத்த தொகுப்பு http://tamilcat.com/?p=13271
2016 http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
(507)

Comments

comments

Category:

All Videos, NTK, Politics, Seeman

Leave a Reply