வரலாற்று மாற்றம் ஏற்பட வேண்டும்: சீமான் – 24 April 2016

திருநெல்வேலி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, வரலாற்று மாற்றம் ஏற்பட வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அ. வியனரசு, பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மு. பட்டன் ஆகியோரை ஆதரித்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

பணம் இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி இத் தேர்தல் களத்தில் நிற்கிறது.

திமுக, அதிமுக ஆட்சிக்கு மாற்று ஆட்சி வேண்டும் என்பது மட்டும் நோக்கமல்ல. தமிழகத்தில் வரலாற்று மாற்றம் ஏற்பட வேண்டும். 9 ஆண்டு கால காமராஜர் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெற்றது. ஆனால், 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவை வியாபாரம் ஆகிவிட்டது.

இயற்கை வளங்கள் கொள்ளை போகிறது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை.

கடன் வாங்கி கல்வி கற்கும் நிலை மாற வேண்டும். மக்களுக்கு கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியன இலவசமாக கிடைக்க வேண்டும். அதற்கு நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்துக்கு கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ச. சிவக்குமார் தலைமை வகித்தார். பேச்சாளர் அன்வர்பாலசிங் உள்ளிட்டோர் பேசினர்.


If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
(9)

Comments

comments

Leave a Reply