தொழிலாளித் தமிழன்

*****************

ஹிந்தியாவில் வேறு எந்த இனத்தையும் விட ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஆடுமாடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் குடிவைக்கப்பட்டது நம் தமிழினமே.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கன்னடவருக்கு மைசூர் அரசும், மலையாளிகளுக்கு திருவாங்கூர் அரசும், தெலுங்கருக்கு ஐதராபாத்தும் இருந்தன.

ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் முற்றுமுழுதாக நெடுநாட்களுக்கு சிக்கியிருந்தது தமிழர்களே.

பஞ்சம் வந்தபோது விளைந்த கொஞ்சம் நெல்லையும் ஆங்கிலேய அரசு விழுங்கிக்கொண்டு மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கு கடல்கடந்து அழைத்துச்சென்று காட்டில் கொண்டுவிட்டது.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை மலையகம், மொரீசியஸ், அந்தமான், பிஜி, ரீயூனியன், மார்த்தினிக், ட்ரினிடாட் டொபகோ, சூரினாம், கயானா, தென்னாப்பிரிக்கா என்று லட்சக்கணக்கானத் தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டு காட்டைத் திருத்தி தோட்டங்களாக்கும் தொழிலாளர்களாக, வாழ்நாள் கூலிகளாக ஆக்கப்பட்டனர்.

அன்றைய மலேயா (மலேசியா,சிங்கப்பூர்) பகுதிக்குச் சென்ற தமிழர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9லட்சம்.

இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்

தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்

சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்

மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000

பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000

ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000

ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000

ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000

கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500

அதாவது ஏறத்தாழ 20லட்சம் பேர் தாய்நிலத்தை விட்டு வெளியேறினார்கள்

வெளியேறினார்கள் என்பது முக்கியமில்லை
இவர்களின் வாரிசுகள் கிட்டத்தட்ட 50லட்சம் பேர் அதே அடிமட்ட தொழிலாளர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.

இது ஆங்கிலேயர் காலத்தில் பிழைக்கப்போன தமிழ் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும்தான்.

1947க்குப் பிறகு ஹிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிழைக்கப்போன தமிழர் எண்ணிக்கை இன்று 80லட்சம்

80-90கள் வரை அரேபிய நாடுகளுக்குப் பிழைக்கப்போனோர் 4லட்சம் பேருக்கு மேல்

தற்போது படித்த இளைஞர்களும் வெளியேறுவது தொடங்கிவிட்டது.
படித்துவிட்டு
ஐரோப்பிய நாடுகளுக்கு உழைத்துகொடுக்கப் போன பட்டதாரிகளின் அதாவது நாகரீக அடிமைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது கூடிக்கொண்டே போகிறது.

இதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 10லட்சத்துக்கும் மேல்

இவர்கள் அத்தனை பேரும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்கள் என்றுதான் கொள்ளவேண்டும்

இது போக தமிழகத்திலேயே பன்னாட்டு தொழிற்சாலைகளில் நிரந்தரமற்ற வேலைகளில் குறைந்த ஊதியத்துக்கு உழைத்துக் கொட்டுவோரையும் சேர்த்தால்
இன்றைய தமிழ் இளைஞர்களில் 95% உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்களே.

வேலைகிடைக்காதோரைக் கணக்கில் எடுத்தால்….

வேண்டாம் முடிவே இல்லாமல் நீளும்.

ஆக இன்று தமிழினமே தொழிலாளி இனம் என்றுதான் சொல்லவேண்டும்.

தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்த தமிழரையும் நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.

1949ல் ‘மலேயா கணபதி’ 24 வயதில் ஆங்கிலேயரால் தூக்கில் போடப்பட்டார்.
அவரது தோழர் ‘மலேயா வீரசேனன்’ 20 வயதிற்குள் ஆங்கிலேயரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1950ல் இவ்விருவரது தோழர் வாட்டக்குடி இரணியன் சிங்கப்பூரில் இருந்து தப்பி தமிழகம் வந்து இங்கே தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டார்
இவரது தோழர்களான ஜாம்பவனோடே சிவராமனும்
ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் சுட்டுக்கொல்லப்பட்டனார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த ‘தில்லையாடி வள்ளியம்மை’ 16வயதில் போராடி இறந்தார்.

மொரீசியசில் அஞ்சலை என்ற பெண் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார்.

1977ல் சிவணு லட்சுமணன் சிங்கள அரசால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுபோக தாமிரபரணி படுகொலை, கீழவெண்மணி படுகொலை, சயாம் மரண ரயில் 50,000 தமிழர் படுகொலை போன்ற வேற்றினத்தார் செய்த தொழிலாளர் படுகொலைகளும் வரலாற்றில் உள்ளன.

தமிழ்மண்ணில் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ‘முதலாளியும் தமிழன் தொழிலாளியும் தமிழன்’ என்று சொல்ல தமிழ்த்தேசியவாதிகள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது.
தமிழர் நாட்டில் அத்தனை பிரச்சனைகளும் அதற்குரிய வழியில் தீர்க்கப்படும்.

தமிழருக்கு ஒரு நாடு இருந்திருந்தால் உலகத் தமிழர்களுக்கு கைகொடுத்திருக்கலாம்

மலேயா கணபதி தூக்குக்குப் காத்திருந்தபோது ஹிந்தியாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அது வாயை திறக்கவில்லை.

ரிசானா நபீக் செய்யாத தவறுக்கு தலைசீவப்பட்டு கொல்லப்பட்டாளே
நம்மால் என்ன செய்யமுடிந்தது?

மலையகத் தமிழர் வெளியேறியபோது அந்தமானில் குடிவைக்க ஹிந்தியா அனுமதி மறுக்க, அவர்கள் நீலகிரியில் குடிவைக்கப்பட்டனர்.

பொறுப்பான ஒரு அரசு இருந்திருந்தால் இத்தனை தமிழர்கள் வெளியேறவேண்டி இருந்திருக்காது.
தாய்நிலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைத்து இங்கேயே வாழ வழிசெய்திருக்கலாம்.

வேற்றினத்தாரின் நேரடி மற்றும் மறைமுக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் தமிழினம் இனியும் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது.

எமக்கான ஒரு படையை அமைத்து இழந்த தாய்மண்ணை மீட்டு அதில் ஒரு மக்களாட்சி அரசை அமைத்து தாய்நில வளங்களை சரியாகப் பயன்படுத்தி எந்தக் குறையுமில்லாமல் நமது சந்ததிகள் வாழச்செய்ய நம்மால் முடியும்.

இன்றைய தமிழினத்துக்கு,
கடினமாக உழைக்கவேண்டிய அவசியமில்லாமல் சுகமாக வாழப்போகும் வருங்கால தமிழர்நாட்டு குடிமகன்களின் சார்பாக
‘உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்’


நாம் தமிழர் கட்சி காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Katchi Videos Total Collections / Video Database

காணொளி தொகுப்பு ஆண்டு வாரியாக |

Video Collection Year Wise

இணைப்பு | Link
Total Collection | மொத்த தொகுப்பு http://tamilcat.com/?p=13271
2016 http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
11161350_568985233205134_2448452487770803505_n

(291)

Comments

comments

Category:

All Videos, History

Leave a Reply