பொல்லாத தமிழர்கள் | Famous Tamil Dons Throughout the World

உலகை உலுக்கிய மனிதர்களை என்றுமே மக்கள் மறப்பதில்லை அப்படி ஆட்டிப்படைத்த தமிழர்களும் இருக்கவே செய்தனர்; அவர்கள் பற்றி ஒரு பதிவு.
மஸ்தான் மிர்ஸா
————————–
1970களிலும் 1980களிலும் மும்பையைக் கலக்கிய நிலழுலக பெருந்தலை (underworld don); 1926ல் இராமநாதபுரத்தில் பனைக்குளம் என்ற சிற்றூரில் பிறந்தவர்; மள்ளராக இருந்து இசுலாமியராக மாறிய குடும்பம்; 1955ல் தமது 17வயதில் சுமைதூக்கும் கூலியாக பம்பாயில் தமது வாழ்க்கைத் தொடங்கினார்; பத்தே வருடங்களில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு இந்தி திரைப்படங்களைத் தயாரிக்கும் அளவு உயர்ந்தார்; 1975 நெருக்கடி காலத்தின்போது சிறையிலடைக்கப்பட்டார்; சிறையில்தான் இவர் இந்தி (பம்பாய் வந்து 20ஆண்டுகள் கழித்து) பேசக் கற்றார்; இவருக்கு தமிழ் மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும்; விமானம் மூலம் சென்னையிலிருந்து நாளிதழ்கள் வரவைத்துப் படித்துக்கொள்வார்; இவர் 1980களில் மும்பையிலேயே முதல் பெரியமனிதராக இருந்தார்; அப்போது இவரது மாதவருமானம் நூறுகோடிக்கும் மேல் என்கிறார்கள்; கடத்தலிலும் இவர் மின்னணு சாதனங்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றையே கடத்தியுள்ளார்; நிழலுக வாழ்க்கையில் இவர் எவ்வளவு நன்மை செய்தார் எவ்வளவு தீமை செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை; இந்தியில் இவரது வாழ்க்கையைத் தழுவி பல படங்கள் வந்துள்ளன; தமிழில் ‘தீ’ என்ற படம் இவர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது.
வரதராசமுதலியார்
—————————
1926ல் வேலூரில் பிறந்தார்; கூலிவேலை செய்ய பம்பாய் சென்று 1980களின் பிற்பகுதியில் பம்பாயை ஆட்டிப்படைத்தவர்; இவரும் மஸ்தான் மிர்ஸாவும் நண்பர்கள்; கடத்தலில் ஈடுபட்ட இவரும் நிலழுலகப் பெருந்தலை; எனக்குத் தெரிந்து ஒரே துறையில் இருதமிழர்கள் கொடிகட்டிப் பறந்தும் தங்களுக்குள் மோதிக்கொள்ளாதது இவர்கள் காலத்தில் மட்டுமே நடந்துள்ளது;
1982ல் இவரது மாதவருமானம் 80கோடிக்கு மேல் என்கின்றனர்; இவர் 1990ல் சென்னையில் மரணமடைந்தபோது இவரது பூதவுடலை மஸ்தான் தனி ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமானம் மூலம் பம்பாய் கொண்டுவந்து தமிழர் பகுதிகளில் அஞ்சலிக்காக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்; இவரது வாழ்க்கையைத் தழுவியும் பல படங்கள் வந்துள்ளன; தமிழில் ‘நாயகன்’ படம் வந்துள்ளது.
பேங்டாங் காளி
———————
1961ல் மலேசியாவில் ‘பேங்டாங்’ல் பிறந்தார்; 1990களில் நிழலுகப் பெருந்தலையாக உருவெடுத்தார்; இவரைப்பற்றி தகவல் தருவோருக்கு ரூபாய் மதிப்பில் 10,40,000 அறிவிக்கப்பட்டிருந்தது; 200பேர் கொண்ட தனிப்படை அமைக்கம்பட்டிருந்தது; 1993ல் காவல்படையினருடன் துப்பாக்கி மோதலில் கொல்லப்பட்டார்; இவரைப் பற்றி வேறு தகவல்கள் இல்லை; தற்போதும் மலேசியாவில் அறிவிக்கப்பட்ட பெருந்தலைகள் பலரும் தமிழர்கள் (பில்லா படம்); மலேசிய எல்லைக்கருகே தாய்லாந்து நாட்டுக்குள் ‘பென்டாங்’ ‘டன்னோக்’ போன்ற பகுதிகளில் பெருந்தலைகள்(பெரும்பாலும் தமிழர்கள்) ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதாகக் கூறுகின்றனர்.
மலையூர் மம்பட்டியான்
———————————-
1959லிருந்து ஐந்து ஆண்டுகள் காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்; நெடுஞ்சாலைத் துறையில் கூலிவேலை செய்துவந்தவர்; பிற்காலத்தில் காட்டுக் கொள்ளைக் காரனாகவும் வேட்டைக்காரனாவும் மாறினார்; தமது காலத்தில் பல வீரசாகசங்களைச் செய்தவர்; கொள்ளைக்காரனாக இருந்து பிற்காலத்தில் தமிழினப் போராளியாக மாறிய வீரப்பனாருக்கு இவர்தான் முன்மாதிரி; கென்னத் ஆன்டர்சன் என்ற ஆங்கிலேயர் காடுகளில் மம்பட்டியானுடன் தங்கியிருந்த தமது அனுபவங்களை தமது நூல்களில் குறிப்பிடட்டுள்ளார்; 1964உடன் பழகிய ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது வாழ்க்கையைத் தழுவி ‘மலையூர் மம்பட்டியான்’ படம் வெளிவந்தது.
இவர்களை முன்மாதிரியாகக் கொள்ளமுடியாதுதான்; இவர்கள் வாழ்க்கையும் பெரும்பாலும் வெளிப்படையானதாக இல்லாததால் இவர்களை எடைபோடுவதும் கடினம்; இருந்தாலும் வெளியிடங்களுக்குச் சென்று அங்கே வல்லவர்களாகத் திகழ்ந்தவர்கள் என்பதால் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள.
நாம் தமிழர் கட்சி காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Katchi Videos Total Collections / Video Database

காணொளி தொகுப்பு ஆண்டு வாரியாக |

Video Collection Year Wise

இணைப்பு | Link
Total Collection | மொத்த தொகுப்பு http://tamilcat.com/?p=13271
2016 http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
534418_425989110838081_909721062_n

(802)

Comments

comments

Category:

All Videos, History

Leave a Reply