தீபாவளியும் தமிழக அரசியலும்

இந்தியத் துணைக்கண்டத்தில் நீண்ட நெடிய வரலாறினைக் கொண்டவர்கள் தமிழர்கள்.அந்நியரின் படையெடுப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் நாம் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல.

இன்று தமிழகத்தை ஆண்டு வரும் வேற்று மொழிக்காரர்கள் தங்களை மட்டுமல்லாது நம்மையும் சேர்த்து திராவிடர் என்று அழைத்து வருகின்றனர்.
தங்களது உண்மையான அடையாளங்களை மறைத்து திராவிடம் என்னும் முகமூடிக்குள் ஒளிந்துள்ள இந்தத் தெலுங்கு வடுகர்கள் தமிழரின் மரபுகளை அழிப்பதில் குறியாக உள்ளனர்.

இயற்கையோடு ஒன்றிய வாழ்வை வாழ்ந்த தமிழன் அந்த இயற்கையை வணக்கினான்.மேலும் முன்னோர்கள், போரில் உயிரிழந்த மாவீர்களுக்கு நடுகல் வழிபாடு மூலாமாக மரியாதை செலுத்துவது என மூட நம்பிக்கைகள் அல்லாத ஒரு வழிபாட்டு முறையைக் கொண்டிருந்தான் தமிழன்.

அத்தகைய தமிழரின் மெய்யியலைக் கொச்சைப் படுத்தியவர்கள் பிராமணர்கள்.இந்து மதம் என்ற பெயரில் அசிங்கமான புராணக் கதைகளை எழுதி தமிழனின் அறிவை மழுங்கடித்தவன் பிராமணன்.
அவனுக்கு எதிராக நாத்திகம் பேசிய இந்த வடுகத் தெலுங்குக் கூட்டம்,பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் தமிழர்களுக்கு எந்த ஒரு வரலாறும் இருந்ததில்லை என்றும்,தமிழர்கள் நாத்திகர்கள் என்றும், ஆரிய பிராமணர்களே ஆனைத்து சடங்குகளையும் திணித்தனர் என்றும் பரப்புரை செய்தனர்.
இதன் மூலமாக தமிழ் மரபு வழி வந்த பண்டிகைகளும்,திருவிழாக்களும் இந்தத் தெலுங்கர்களால் கொச்சைப்படுத்தப்பட்டன!!

இந்த அரசியல் செய்வதன் மூலம் தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தன்வசம் தக்கவைத்துக்கொண்டுள்ளான் தெலுங்கன்.

இன்றய இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு பண்டிகைக்காக இவ்வளவு பெரிய அரசியல் நடந்ததில்லை.அந்தப் பண்டிகை தீபாவளி ஆகும்.

தமிழ் நாட்டில் ஊடுருவி கால்பதிக்கத் துடிக்கும் இந்துத்துவா சக்திகள் ஆகட்டும்,நாத்தீக வேடத்தில் இருக்கும் தெலுங்கர்கள் ஆகட்டும், தமிழனின் மெய்யியலையும்,வானியல் அறிவையும் மறைப்பதிலேயேதான் குறியாக உள்ளனர்.
மக்கள் கொண்டாடும் பண்டிகையில் ஏன் இவர்கள் அரசியல் செய்யவேண்டும்??? இதில் இவர்களுக்கு என்ன இலாபம்??நமது அண்டை மாநிலத்தில் இதுபோன்று நடக்கிறதா???

கேரளாவில் ஓணம் பண்டிகை இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையாகும்.ஆனால் அப்பண்டிகையானது மாநில விழாவாகவும்,கேரள மக்களின் கலாச்சார அடையாளமாகவும் மாறிவிட்டது.அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறிவிட்டது.

அந்த மாநிலத்தை மதசார்பற்ற ஒரு காங்கிரசுக்காரன் ஆண்டாலும் ,கடவுள் மறுப்பு கொள்கையை உடைய ஒரு கம்யூனிசவாதி ஆண்டாலும் ஓணம் பண்டிகையை வைத்து யாரும் அங்கே அரசியல் செய்வதில்லை.
ஆனால் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்தத் திராவிடக் கூத்து நடந்துவருகிறது.
தீபாவளிப் பண்டிகை ஒரு ஆரியப் பண்டிகையாம்.காரணம் ஆரியனான கிருசுணன் திராவிடனான நரகாசுரனை வதம் செய்தாராம்.அதனால் இப்பண்டிகையை திராவிடர்கள் கொண்டாடக்கூடாது என கொக்கரிப்பார்கள் இந்தத் தெலுங்கு திராவிடர்கள்.

ஆரிய பிராமணன் எழுதி வைத்த கதைகளை உண்மையென நம்பிக்கொண்டு, இன்று நாத்தீகம் பேசிக்கொண்டு திரியும் இந்த கருஞ்சட்டைக் கயவர்களின் உணமையான நோக்கம் தான் என்ன???
ஆரிய பிராமணன் எழுதி வைத்தது எப்படி உண்மையாகும்?? கிருசுணனும் நரகாசுரனும் உண்மையாகவே வாழ்ந்த கதாபாத்திரங்கள் என்று இவர்கள் நம்புகிறார்களா???
அதைப் பற்றி வேறு கோணத்தில் இவர்கள் என்றாவது ஆய்வு செய்ததுண்டா???

சமணப் பார்வையில் தீபாவளி:
இந்தியாவில் தீபாவளிக்கு ஆயிரம் கதைகள் சொல்லபட்டாலும், தீபாவளி என்பது ஜைனத் துறவியான மகாவீரன் இறந்த தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.ஒருவன் இறந்தநாளை நாம் ஏன் கொண்டாடவேண்டும்?
இன்றய தமிழகம் ஒரு காலத்தில் சமணர்களின் வாழ்விடமாக இருந்தது.அமணம்,சமணம் போன்ற சொற்கள் தூய தமிழ் சொற்களே!!!
இன்று கூட சமணங்கால் போட்டு உணவு உண்ணும் வழக்கம் தமிழ்நாட்டில் தானே உள்ளது!!!
உடலில் ஆடையின்றித் திரியும் ஒருவனை அம்மணமாகத்( அமணமாக ) திரிகிறான் என்ற சொல்லாடலும் தமிழ் நாட்டில் தானே உள்ளது!!!
பண்டைய தமிழர்கள் கடைப்பிடித்த சமணத்தில் இருந்து பிரிந்து சென்றது தான் வடநாட்டு ஜைனம்.பிரித்தவன் தான் மகாவீரன்!!
சமணத்தில் இருந்து பிரிந்து சென்ற ஜைனர்களுக்கும் தமிழர்களுக்கும் அடிக்கடி தர்க்கங்களும் மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

அப்படி ஒருமுறை நடந்த தர்க்கத்தில் மற்கலி கோசலர் என்ற தமிழ்த் துறவியை வடுகன் மகாவீரனின் சீடர்கள் நஞ்சு வைத்துக் கொன்றுவிட்டனர்.
இதனால் கோபமுற்ற தமிழர்கள் மகாவீரனையும் அவனின் சீடர்களையும் எதிரியாகக் கருதி,மகாவீரன் இறந்த தினத் அன்று கறிவிருந்து உண்டு மகிழ்ந்தனர்.
மகாவீரன் இறந்த செய்தியைக்கேட்டு ஆனந்தத்தில் வெடிவைத்துக் கொண்டாடினர்.
இன்றும் கூட மதுரைக்கு அருகாமையில் உள்ள மாங்குளம் கிராமத்தில் தீபாவளி அன்று சமணப் பாழிகளுக்குச் சென்று கறிவிருந்து செய்து படைத்துவிட்டு வணங்கி வருகின்றனர் தமிழர்கள்!!!
இன்று கூட இருவர் சண்டைப் போடும்பொழுது , கோபமுற்ற ஒருவன் மற்றோருவனைப் பார்த்து “ நீ என்றைக்கு சாகிறாயோ அன்று தான் எனக்கு தீபாவளி “ என்று சூளுரைத்துவிட்டு வருவதை நாம் காண்கிறோம்!!
எதிரி ஒருவன் இறந்த பொழுது நாம் அதைக் கொண்டாடுகிறோம்.அப்படிதான் மகாவீரன் இறந்தவுடன் தமிழர்கள் தீப ஒளி கொண்ட விளக்குகளை ஏற்றி மிக்க மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

பிற்காலத்தில் சமணத்தை முற்றிலும் அழித்து விட்ட பிராமணர்கள் கிருசுணன் மற்றும் நரகாசுரன் போன்ற போலிக் கதாப்பாத்திரங்களை உருவாக்கி தீபாவளி ஒரு இந்து மதப் பண்டிகை என்று மடைமாற்றிவிட்டனர்!!
இந்த உண்மை திராவிடத் தெலுங்கர்களுக்கு நன்கு தெரியும்.தெரிந்தே தமிழனிடம் இருந்து இதை மறைக்கிறார்கள்!!

சங்க இலக்கியங்களில் கார்த்திகை தீபம்:
தீபாவளி அன்று வெடிவைத்து கொண்டாடிய தமிழன் கார்த்திகை மாதம் முழுநிலவன்று தீபத் திருநாள் என்று மேலும் ஒரு சிறப்பான பண்டிகையைக் கொண்டாடினான்.
அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் கிடைகின்றன.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், விளக்கு வழிபாட்டைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.
இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது…
(நெடுநல்வாடை: 42-43)
இன்றும் தமிழகத்தில் கார்த்திகை தீப வழிபாடு, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரமும் முழுமதியும் கூடிய நன்னாளில் நடந்து வருகிறது. சங்கம் மருவிய கால இலக்கியமான கண்ணங்கூத்தனாரின் கார் நாற்பது, கார்த்திகை மாத தீப வழிபாட்டுக்கு ஆதாரமாக உள்ளது.
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் நாள் விளக்கு
(கார்நாற்பது -26)
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியும் கார்த்திகை விளக்கு குறித்து, ‘கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்’ என்று பாடுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், திருமயிலையில் இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பிக்கப் பாடிய பூம்பாவைப் பதிகமும் கார்த்திகை விளக்கீடு குறித்துப் பேசுகிறது.
கார்த்திகை நாள்… விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்!
(திருஞானசம்பந்தர் பூம்பாவை திருப்பதிகம்- திருமுறை: 2-47)

கார்த்திகை நட்சத்திரம்:

கார்த்திகை மாதம் முழுநிலவன்று, வானில் நிலவு கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும். இதனால் தான் நாம் அன்றைய தினத்தில் கொண்டாடுகிறோம்.பண்டைய தமிழர்களின் பெருவிழாக்களுள் இதுவும் ஒன்று !!!

இப்படிப் பல வரலாற்று சான்றுகள் இருந்தும் கூட இன்று தமிழன் வந்தேறித் தெலுங்கன் முன் கூனிக் குறுகி நிற்கிறான்.
வரலாறே இல்லாத ஒரு இனம் போல் தமிழனை சித்தரிக்கிறான் தெலுங்கன்.
காலம் காலமாக பிராமண அடிவருடியாக இருந்த தெலுங்கர்கள் இன்று தமிழனை அழிப்பதற்காகவே போட்டுக்கொண்ட திடீர் வேடம் தான் நாத்தீகம்.
நாத்தீகம் பேசும் இவர்கள் பிராமணர்களை ஆதரித்த தெலுங்கு அரசர்களை ஒரு பொது விமர்சனம் செய்தது கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இவர்கள் சொல்வது போல் அனைத்தையும் ஆரியனுக்குத் தாரை வார்த்த்துக் கொடுத்துவிட்டு ஒன்றும் இல்லாத நாதியற்ற இனம் போல் நாம் காட்சியளிக்க வேண்டும் என்பதே வந்தேத் தெலுங்கர்களின் உண்மையான உள் நோக்கமாக இருக்கிறது.
இனியும் நாம் இவர்களின் பேச்சைக் கேட்டுகொண்டிருக்கக் கூடாது.

நாம் இந்துக்களும் அல்ல!!! நாத்தீகர்களும் அல்ல!!!
நாம் தமிழர்கள்!!!
வாழ்க தமிழ்!!! வெல்க தமிழர்!!!

(207)

Comments

comments

Leave a Reply