அர்ஜுன் சம்பத் தமிழர் அல்ல: நாம் தமிழர் கட்சி அதிர்ச்சி தகவல் – 19 April 2016

Arjun Sampath is not a Tamilian – 19 April 2016

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழர் அல்ல என நாம் தமிழர் கட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கிறிஸ்தவர், அவர் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் வினையரசு கூறுகையில், சீமான் கிறிஸ்தவர் என கூறுவது பொய்யான தகவல். அவர் இந்து, கிறிஸ்தவம் போன்ற மதங்களை எதிர்ப்பவர். தமிழர்களுக்கான மதம் சைவ மதம். அதைத் தான் அவர் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

தமிழர்களுக்கான மரபு வழி வழிபாட்டு முறைகளை ஏற்ற, முருகனையும், கிருஷ்ணனையும் முப்பாட்டன் என அறிவித்துள்ளார்.

ஆனால், அர்ஜுன் சம்பத் தமிழர் அல்ல. வீட்டிலும், வெளியிலும் தமிழை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் தான் தமிழர் என்று ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், அந்த வகையில் பார்த்தால் அர்ஜுன் சம்பத் தமிழர் அல்ல. அவர் எங்களைப் பற்றி பேச தகுதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.


If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)
(22)

Comments

comments

Category:

All Videos, News, NTK

Leave a Reply