YouTube Video | யூடூப் காணொளி –
ஆழி செந்தில்நாதன் விவாதம் கருத்துச் சுதந்திரம் | Aazhi Senthil Nathan Debates on Freedom Speech | 24 October 2015

Dailymotion Video | டெய்லிமோசன் காணொளி –
ஆழி செந்தில்நாதன் விவாதம் கருத்துச் சுதந்திரம் | Aazhi Senthil Nathan Debates on Freedom Speech | 24 October 2015

நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Videos Total Collections

காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year இணைப்பு | Link
2016, 2017, 2018 ………. http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on “Add to Cart“)




Aazhi Senthil Nathan

நேற்றைய இரவு தந்தி டீவி விவகாரம்

நேறறைய தந்தி டீவி ஆய்த எழுத்து விவாதம் எவ்வளவு கசப்பான யதார்த்தங்களை உங்கள் வீட்டு முட்டாள் பெட்டியில் இறைத்துவிட்டுச் சென்றது என்பதை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். மனுஷ்ய புத்தரனை குறிவைத்து இரண்டு காவிகள் செய்த அக்கிரமங்கள் அநாகரிகத்தின் உச்சகட்டங்கள்.

நேற்று மனுஷ்ய புத்திரனுக்கு நடந்த அநீதி தொலைக்காட்சி நிலையங்களில் தொடர்ந்து அரங்கேறிவரும் நாடகம் ஒன்றின் ஒரு காட்சிதான். இறுதிச் சுற்றில் மிகவும் மோசமான முறையில் பாஜக “எழுத்தாளர்” மா.வெங்கடேசன் மனுஷ்ய புத்திரனை நடத்தியபோது, “அது கண்டிக்கத் தக்கது, அது கண்டிக்கத்தக்கது” என்று கத்தினேன். உங்களுக்கு காட்டப்பட்டதா என்று என்று எனக்குத் தெரியாது. ஆனால் முறையான எதிர்வினை ஆற்ற அங்கே வழியில்லை.

இந்த விவாதத்தின் அடிப்படைப் பிரச்சினையே விவாதிக்க இயலாத தன்மையுள்ள இரு தரப்பினரை அழைத்ததுதான்.சாகித்ய அகாதெமி விருதுகளை திருப்பிக்கொடுத்து தொடர்பாக ஒரு பக்கம் மனுஷ்ய புத்திரனையும் என்னையும் கூப்பிடுகிறார்கள். நான் பெரிய எழுத்தாளன் அல்ல என்றாலும் குறைந்தபட்சம் ஒரு பதிப்பாளன். இன்னொரு பக்கம் காவிப் படையிலிருந்து இருவரைக் கூப்பிடுகிறார்கள். அவர்களுக்கு இந்த விவகாரம் பற்றி எந்த விதமான ஆய்வும் இல்லை. தங்கள் அரசாங்கத்தை காப்பாற்றுவது என்பதைத் தவிர. அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்., அது அவர்களின் உரிமைதான் என்கிற வகையில் அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அதில் ஒரு வியூகம் இருக்கிறது. வெற்றிபெற வாய்ப்பில்லாத விவாதங்களை விதண்டாவாதங்களாக மாற்றி, முறையாக விவாதம் செய்ய வருபவர்களை ஓரம்கட்டுவது.

ஆக தாக்குதல் நடத்த ஒர் அணி, அவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள மற்றொரு அணி… உங்களுக்கேத் தெரியும். சமீப காலங்களில் இவ்வாறுதான் நமது தொலைக்காட்சி விவாதங்கள் அமைகின்றன. இந்த அடிப்படையில் மாற்றம் ஏற்படாவிட்டால், தொலைக்காட்சி நிறுவனங்களின் வியூகத்துக்கும் காவிகளின் வியூகத்துக்கும் நாம் பலியாவது தவிர வேறு ஏதும் நடக்காது.

நெறியாளர் ஹரிஹரன் ஒரு குறிப்பிட்ட கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டார். இதுவரை எவ்வளவோ அநியாயங்கள் நடைபெற்றன. அப்போதெல்லாம் வெகுண்டெழாத நீங்கள், இப்போது ஏன் வெகுண்டெழுகிறீர்கள் என்றார். இந்தக் கேள்விக்கு மிக விரிவாக நான் பதில் அளித்தேன். மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியை எழுப்புவது தவறான விவாதத்துக்கே வழிவகுக்கும் என்றேன். அதுதான் நடந்தது.

இந்த கேள்விதான் காவிப்படையின் பிரதான கேள்வி. இந்த ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதின் மூலம் மட்டுமே பாஜகவினர் இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இதன் மூலம் இதுவரை நடந்த பல போராட்டங்களை அவர்கள் மறைப்பதோடு, எழுத்தாளர்களை மேலும் மேலும் கேவலப்படுத்துகிறார்கள் என்று மனுஷ்ய புத்திரனும் கடுமையாக பதில் சொன்னார். ஆனால் ஹரிஹரனின் அந்தக் கேள்வியை மையப்படுத்திதான் நாராயணனும் மா..வெங்கடேசனும் கத்திக்கொண்டிருந்தார்கள். எழுத்தாளர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள் என்றார்கள்.

தொடர்ச்சியாக அவர்கள் மனுஷ்ய புத்திரனை குறிவைத்து அடித்தார்கள், விளம்பர இடைவேளையில்கூட ஸ்டூடியோவில் நிலைமை மோசமாக இருந்தது. இறுதியில் மனுஷ்ய புத்திரன் மிகவும் ஆவேசமாக எதிர்கொள்ள வேண்டிய சூழலை அவர்கள்தான் உருவாக்கினார்கள். ஒரு கட்டத்தில், கொலையும் செய்வீர்கள் நீங்கள் என்று மனுஷ்ய புத்திரன் கூறுகிற அளவுக்கு நிலைமை மோசமானது.

அங்கே இருந்த எனக்கே, என்ன பேசுகிறார்கள் என்பதை செவிமடுப்பதில் சிக்கல் இருந்தது. அந்த அளவுக்கு இரைச்சல். ஆனால் பா.வெங்கடேசன் குரலை உயர்த்தி மனுஷ்ய புத்திரனை நோக்கி பாய்ந்தார். எதிர்ப்பார்த்ததைப் போல மனுஷ்ய புத்திரனின் மதத்தை இழுத்தார். இதுதான் மா.வெங்கடேசனின் நோக்கம். அதை அவர் எந்த தயக்கமும் இல்லாமல் செய்தார். இதை இருவருமே எதிர்ப்பார்த்தோம்.

இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று நானும் உறுதிப்பட ஹரிஹரனைப் பார்த்துச் சொன்னேன். மனுஷ்ய புத்திரன் ஆவேசத்தின் உச்சத்துக்குச் சென்றார். ஆனால் ஹரிஹரன் அவசர அவசரகமா நிகழ்ச்சியை முடிப்பதில் கவனம் செலுத்தினார். மக்கள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லிச்சொல்லி அங்கே நிலவிய பாரபட்சமான சூழலை சமப்படுத்த முயன்றார்..

ஆனால் நண்பர் ஹரிஹரனுக்கும் விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் நண்பர்களுக்கும் ஒன்று கூறவிரும்புகிறேன்: இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் நாங்கள் வருகிறோம். உங்களுக்கும் தெரியும். நீங்கள் ஆளும் பாஜகவின் ஆதரவாளர்களை அழைப்பதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஏனென்றால் விவாதத்தின் மூலமாகத்தான் நாங்கள் எங்கள் கருத்துகளைச் சொல்ல இயலுகிறது. எதிர்க்கருத்துகளை அதிகம் எதிர்கொள்வதன் மூலமாகவே மக்களுக்கு நாங்களும் எங்கள் கருத்துகளைச் சொல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. காவி கும்பலின் தனிநபர் தாக்குதலை ஞாநி, மனுஷ்ய புத்திரன் போன்றோர் எதிர்கொள்வதன் மூலமாக அந்த கும்பலை அம்பலப்படுத்திவருகிறார்கள்.

நிகழ்ச்சியின் போது மட்டுமல்ல, நிகழ்ச்சி முடிந்து வெளியேறுகையில்கூட மனுஷ்ய புத்திரனின் மதத்தை மா..வெங்கடேசன் திட்டமிட்டு வம்புக்கிழுத்தார். “அவர் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி, என்னிடம் அதற்கு ஆதராம் இருக்கிறது” என்று உறுமிக்கொண்டே சென்றார். “எல்லா எழுத்தாளர்களும் போர்டு பவுண்டேஷின் பணம் வாங்குபவர்கள், எங்களிடம் ஆதாரம் இருக்கிறது” என்றார் பாஜக நாராயணன்.

மிகமோசமான முறையில் பாஜக அடியாட்கள் நிலையங்களை ஆக்கிரமித்துக்கொண்டு செயல்படுவதும் நெறியாளர்கள் அவர்களை அடக்கமுடியாமல் அல்லது அடக்க விரும்பாமல் அல்லது திட்டமிட்டே அனுமதித்து இப்படித்தான் விவாதங்களை நடத்துவார்கள் என்றால் நாளைக்கு நான்கு இருக்கைகளிலும் காவி அணியினரையே வைத்து பஜனை நடத்தவேண்டியதாகவே ஆகிவிடும். இதை நான் எச்சரிக்கையாகச் சொல்லவில்லை. எங்களுக்கு பயன் இல்லை என்றால் நாங்கள் ஏன் கலந்துகொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வருவது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிடும்.

என்னதான் டென்ஷன் ஏற்பட்டாலும், இப்படிப்பட்ட நபர்களை அம்பலப்படுத்த முடிகிறதே என்கிற அளவில்தான் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். ஆனால் அது ஒரு எல்லையைக் கடந்தால், மாற்றுக் கருத்தைச் சொல்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போனால், அதாவது, “தாக்துதல் நடத்த பாஜக. அதிலிருந்து தற்காத்துக்கொள்ள மற்றவர்கள்” என்பதுதான் மீடியா டெக்னிக் என்றால், இந்த நெடுந்தொடர் நீண்ட நாளைக்கு ஓடாது.

(196)

Comments

comments

Leave a Reply